உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாற்றுக்கட்சியினரை சேர்க்க முடியாமல் தி.மு.க., திணறுகிறது: ஆர்.எஸ்.பாரதி

மாற்றுக்கட்சியினரை சேர்க்க முடியாமல் தி.மு.க., திணறுகிறது: ஆர்.எஸ்.பாரதி

திருநெல்வேலி:''மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை சேர்க்க முடியாமல் தி.மு.க., திணறுகிறது'' என அதன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை திறந்து வைத்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பழனிசாமி சறுக்கி விழுந்து பல மாதங்கள் ஆகிறது. அவர் இனிமேல் எழ முடியாது. அவர் சறுக்கு மரம் ஏறிவிட்டார், இறங்குவது எப்படி என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க., கூட்டணி உடைந்து விடும் என 2019ல் இருந்தே சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக உருவி கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக தி.மு.க.,விற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க., கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. தி.மு.க.,வின் பலம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருக்கிறது. பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணம் முடித்த உடன் மேலும் சிலர் தி.மு.க., வுக்கு வந்து விடுவர். எங்கள் கட்சிக்கு வருவோருக்கு இடம் கொடுக்க முடியவில்லை. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி முழிக்கிறோம். லோக்சபா தேர்தலின் போது 8 முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தார். நாங்கள் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். பத்து முறை அவர் வந்தால் சட்ட சபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

sankaranarayanan
ஆக 11, 2025 18:48

என்னதான் படித்தாலும் எழுதினாலும் பேசினாலும் இவரால் ஒரு தடவை கூட ஆலந்தூரில் நின்று ஜெயிக்கமுடியவில்லையே இதை விட இவருக்கு வேறு என்ன அவமானம் அபராதம் வேண்டும்


R.MURALIKRISHNAN
ஆக 11, 2025 18:30

பாரதி, எழுந்திருப்பா. தூக்கத்துல உளர்றதே உனக்கு பொழப்பா போச்சு


sankar
ஆக 11, 2025 17:05

உண்மை பேசி பழக்கம் இல்லை இவருக்கு


karupanasamy
ஆக 11, 2025 17:01

எல்லோருக்கும் எல்லாமும் எக்ஸப்ட் திமுக.


A.Muralidaran
ஆக 11, 2025 13:45

வயதானல் இப்படித்தான் நினைக்கத் தோன்றும்


Rameshmoorthy
ஆக 11, 2025 12:35

Poor man, had to retire without getting any position of MLA, MP, very very loyal


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை