உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / டாக்டர்கள் பற்றாக்குறை விடுப்பு எடுக்க தடை

டாக்டர்கள் பற்றாக்குறை விடுப்பு எடுக்க தடை

திருநெல்வேலி:தமிழகத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால் ஈட்டிய விடுப்பு முன்அனுமதி கிடையாது என தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ஜெ.ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: டாக்டர்கள் சொந்த வேலை காரணமாக ஈட்டிய விடுப்பு முன் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தற்போது அதிகம் வரப்பெறுகின்றன. தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக விடுப்பு கேட்பவர்களுக்கு விடுப்பு வழங்கினால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை வழங்க இயலாத சூழல் ஏற்படுகிறது. எனவே டாக்டர்கள் பற்றாக்குறை சீரடையும் வரை ஈட்டிய விடுப்பு முன் அனுமதி வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. ஈட்டிய விடுப்பு கேட்கும் விண்ணப்பங்களை இயக்கத்திற்கு பரிந்துரைத்து அனுப்புவதை அதிகாரிகள் தவிர்க்குமாறும் தங்கள் அளவிலேயே விடுப்பு விண்ணப்பங்களை நிராகரிக்குமாறும் அனைத்து மாவட்ட நல பணிகள் இயக்குனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ