உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா

நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா

திருநெல்வேலி:திருநெல்வேலியில், ஹெலிகாப்டரில் சுற்றி வரும் சவாரிக்கு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த பாரத் டைகர் என்ற நிறுவனம், திருநெல்வேலியில் நேற்று முதல், நான்கு நாட்களுக்கு ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தச்சநல்லுார் அருகே மைதானத்தில் இருந்து கிளம்பி டவுன், நெல்லையப்பர் கோவில் பகுதி, தாமிரபரணி ஆறு என, 10 நிமிடங்கள் சுற்றி அழைத்து வந்து, மீண்டும் மைதானம் வரும். இந்த பயணத்திற்கு ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒருமுறை ஹெலிகாப்டர் பயணத்தில், ஆறு பேர் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக, திருநெல்வேலி முழுதும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் சுகுமார், இதற்கு அனுமதி வழங்கியுள்ளார். நேற்று ஹெலிகாப்டர் சவாரி துவங்கியது. தினமும் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, செப்., 28 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ