வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இப்படியா மனைவி மகன் இருப்பார்கள்
மேலும் செய்திகள்
2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
07-Jan-2025
திருநெல்வேலி,:திருநெல்வேலி கே.டி.சி., நகர் ஆசிரியர் காலனியில் வசித்தவர் ஆறுமுகம், 50; ஓவியர். இவரது மனைவி முத்துலட்சுமி, 48. மகன் முத்துவேல், 26. முத்துவேல் கோவை தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.மூவரும் கோவையில் வசித்தனர். ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் தகராறு காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கு முன் அங்கிருந்து திருநெல்வேலி வந்து விட்டார்.தன் அலைபேசியையும் கோவையில் வைத்து விட்டு வந்ததால் அவர் மனைவி, மகனை தொடர்பு கொள்ளவில்லை. இவர் மட்டும் திருநெல்வேலி கே.டி.சி.நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கடந்த எட்டு மாதங்களாக இவர்கள் பேசிக் கொள்ளவில்லை.இந்நிலையில் முத்துலட்சுமி, மகன் பொங்கல் விடுமுறையில் நேற்று திருநெல்வேலி வந்தனர். வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. அக்கம் பக்கத்தில் தெரிவித்து கதவை உடைத்துப் பார்த்தபோது ஆறுமுகம் இறந்து கிடந்தார். உடல் அடையாளம் தெரியாதபடி எலும்புக் கூடாகி மக்கி இருந்தது.அவர் இறந்து நான்கு மாதங்களாகி இருக்கலாம் என தெரிகிறது. எனவே, பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை மனைவி, மகனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இப்படியா மனைவி மகன் இருப்பார்கள்
07-Jan-2025