உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாஞ்சார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்சுந்தர் 25. இவர் 22 வயதான இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் நெருங்கிப்பழகினார். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் பேசவில்லை. அவர் கேட்டபோது திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ராம்சுந்தரை, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 26, 2025 04:52

பாவம் ரெண்டு வயது குழந்த்தை. என்ன செய்யும்? ஒன்றுமே தெரியாமல்தான் அவனுடன் ஜாலியாக இருந்ததா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை