மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் சிக்கிய வாலிபர் மீண்டும் கைது
13-Dec-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் 27. இவருக்கு மனைவி, கைக்குழந்தை உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை சித்திரை மகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அகஸ்தீசன் 47. பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் ஹரிஹரன், தான் அமெரிக்காவிற்கு ஆப்பிள் ஏற்றுமதி செய்வதாகவும் அதற்காக தூத்துக்குடியில் குடோன் வைத்துள்ளதாகவும், தொழில் அபிவிருத்திக்கு ரூ. 20 லட்சம் கடன் வேண்டும் எனவும் கேட்டுள்ளார். குடோனை பார்வையிட அகஸ்தீசன் மனைவியுடன் திருநெல்வேலி வந்தார். டிச., 10 இரவு கே.டி.சி.நகர் அருகே சாம் காட்டேஜ் என்ற விடுதியில் இரு குடும்பத்தினரும் பக்கத்து பக்கத்து அறை யெடுத்து தங்கினர். மறுநாள் காலை அகஸ்தீசன் பார்த்த போது தன் அறை திறந்து கிடந்ததாகவும் பக்கத்து அறையில் தங்கி இருந்த நபரையும் அவரது மனைவியையும் காணவில்லை எனவும், மனைவியின் தாலி செயின் உள்ளிட்ட நகைகள் 16 பவுன் திருடு போனதாகவும் புகார் செய்தார். அதையடுத்து ஹரிஹரனை போலீசார் கைது செய்து 16 பவுன் நகைகளை மீட்டனர். அவர் பெயரை சிவா என மாற்றி அறையெடுத்து நகையை பறித்தது தெரியவந்தது.
13-Dec-2025