உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குடும்பத்தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு தாய், மகன் பலி; தந்தை உயிர் கவலைக்கிடம்

குடும்பத்தகராறில் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு தாய், மகன் பலி; தந்தை உயிர் கவலைக்கிடம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே ஆரைக்குளத்தில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் மனைவி, மகன் உயிரிழந்தனர். படுகாயமடைந்த கணவர் உயிருக்கு போராடி வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே ஆரைக்குளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் ஜக்கரியா 64. மனைவி மெர்சி 57, இரண்டாவது மகன் ஹார்லி பினோ 27. நேற்று மதியம் மூவரும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் தீ ஏற்பட்டு மூவரும் காயங்களுடன் அலறினர். அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பெயரில் தீயணைப்பு படையினர் வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். தீக்காயங்களுடன் மூவரையும் மீட்டனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மெர்சியும் ஹார்லி பினோவும் இறந்தனர். ஜக்கரியா சிகிச்சையில் உள்ளார். தீ விபத்துக்கு காரணம் ஜக்கரியா வெளிநாட்டில் பணிபுரிந்தார். ஓய்வுக்குப் பிறகு குடும்பத்தினருடன் உள்ளார். அவருக்கும் மனைவி மெர்சிக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்தது. அவர்களது மூத்த மகன் ஹென்றி 29,க்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர் மனைவியுடன் கன்னியாகுமரி சென்றுள்ளார். ஜக்கரியாவின் மூத்த மகள் வெளியூரில் உள்ளார். ஹென்றியின் திருமணத்தில் ஜக்கரியா பங்கேற்கவில்லை. இந்த பிரச்னையில் தன்னை குடும்பத்தினர் ஒதுக்குவதாக கூறி நேற்று அவர் வீட்டில் இருந்தபோது தன்மீதும் தனது அறையிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். மனைவி, மகன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என தெரிகிறது. இதில் மனைவி, மகன் இறந்து விட்டனர். சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார், ஜக்கரியாவிடமும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !