மேலும் செய்திகள்
தீயணைப்பு துறை அலுவலர்கள் ஆஜராக சம்மன்
23 hour(s) ago
தீயணைப்புத்துறை அலுவலர்கள் ஆஜராக சம்மன்
23 hour(s) ago
மது போதை தகராறில் இரட்டை கொலை
27-Dec-2025
மது விருந்தில் தகராறு: காதை வெட்டிய ஏட்டு
27-Dec-2025
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நெற்கட்டும்செவலைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அரியூரைச் சேர்ந்த அனிதாவுக்கும் 25, திருமணமானது. ஒரு மகன், 6 மாத பெண் குழந்தை ஜெனிஷா ஸ்ரீயும் உள்ளனர். ராஜ்குமார் தற்போது வட மாநிலத்தில் பணியில் உள்ளதால் அனிதா குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் டிச., 24 அனிதா 6 மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு ஊருக்கு அருகிலுள்ள கிணற்றுக்கு சென்றார். அங்கு குழந்தையுடன் கிணற்றில் குதித்தார். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக குழந்தை ஜெனிஷா ஸ்ரீ திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. அனிதா தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
23 hour(s) ago
23 hour(s) ago
27-Dec-2025
27-Dec-2025