உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கடி தொல்லைக்கு நடவடிக்கை இல்லை நகராட்சிக்கு நாய் பொம்மை பரிசளிப்பு

கடி தொல்லைக்கு நடவடிக்கை இல்லை நகராட்சிக்கு நாய் பொம்மை பரிசளிப்பு

திருநெல்வேலி: கடையநல்லுார் நகராட்சியில், நாய்க்கடி தொல்லைக்கு நடவடிக்கை எடுக்காத தலைவருக்கு, நாய் பொம்மையை பா.ஜ., கவுன்சிலர்கள் பரிசளித்தனர். கடையநல்லுார் நகராட்சி கூட்டம் நேற்று தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. கவுன்சிலர்கள், நகராட்சி பகுதியில் வெறி நாய்க்கடி தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதுவரை நாய்கள், 40 பேருக்கும் மேல் கடித்துள்ளன எனவும் கூறினர். அதற்கு பதிலளித்த தலைவர், “நகராட்சியில் உள்ள நாய்களைப் பிடித்து பராமரிக்க நாய் காப்பகம் அமைப்பதற்காக, துறை அமைச்சர் நேருவை சந்தித்து மனு அளித்துஉள்ளேன். ''ஒப்புதல் கிடைத்தவுடன் அது அமைக்கப்படும்,'' என, தெரிவித்தார். கூட்டத்தில் நகராட்சி மேம்பாட்டு பணிகள் குறித்த, 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில், நகராட்சி நிர்வாகம் வெறி நாய் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பா.ஜ., கவுன்சிலர்கள் ரேவதி, சங்கரநாராயணன், மகேஸ்வரி ஆகியோர், நாய் பொம்மையை, 'இது, நகராட்சி நிர்வாகத்துக்கான பரிசு' எனக் கூறி தலைவரின் டேபிளில் வைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ