மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., மேயர் சரவணன் மீது அக்கட்சியினரே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை, செயல் இழக்க செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர முயற்சி செய்து வருகிறார்.நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க., கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு, கடந்தாண்டு டிச., 6ல் கமிஷனர் தாக்கரேவிடம் வழங்கினர்.இன்று மாநகராட்சி மைய கூட்ட அரங்கில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கிறது. 55 கவுன்சிலர்களில் நான்கு பேர் அ.தி.மு.க.,வினர். மற்ற அனைவரும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர்.மேயர் தேர்வு நடந்தால் போட்டியிட வாய்ப்புள்ள ஒருவரது ஏற்பாட்டில், 25 தி.மு.க., கவுன்சிலர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்துள்ளது.மேயருக்கு எதிரான வாக்கெடுப்பு வெற்றிபெற குறைந்தது 44 கவுன்சிலர்கள் தேவை என்பதால், இனி தீர்மானம் நிறைவேற வாய்ப்பு இல்லை என கட்சியினர் தெரிவித்தனர்.
29-Sep-2025
25-Sep-2025