லண்டன் மாணவியுடன் காதல் திருமணம் கடத்தல் என பெற்றோர் புகார்
திருநெல்வேலி: லண்டனில் படித்துக்கொண்டிருக்கும் பெண்ணை வரவழைத்து திருநெல்வேலி வாலிபர் காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்தவர் இசக்கி பாண்டி 25. வழக்கறிஞர். இவர் திருநெல்வேலியை சேர்ந்த லண்டனில் படித்து வரும் சஸ்மிதாவை காதலித்தார். சில தினங்களுக்கு முன்பு சஸ்மிதா லண்டனில் இருந்து கோவை வந்தார். அங்கு இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசில் புகார் தெரிவித்தனர். சஸ்மிதா திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது பெற்றோர் திருநெல்வேலி போலீசில் புகார் செய்தனர். 18 வயது நிறைவு பெற்று இரண்டு நாட்களே ஆன மாணவியை கடத்தித் திருமணம் செய்து கொண்டனர் எனவும், வாலிபருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக புகைப்பட ஆதாரங்களுடன் பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.