உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / புகார் கொடுக்க சென்ற போது போலீசார் பாலியல் தொல்லை மனித உரிமை ஆணையத்தில் மனு

புகார் கொடுக்க சென்ற போது போலீசார் பாலியல் தொல்லை மனித உரிமை ஆணையத்தில் மனு

திருநெல்வேலி:போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்ற போது போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, மாநில மனித உரிமை ஆணையத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார்.தமிழக மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், திருநெல்வேலி அரசு விருந்தினர் மாளிகையில் புகார்தாரர்களிடம் விசாரணை நடத்தினார். மொத்தம் 29 வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆணையத்தில் கொடுத்த புகாரில், “ஒரு பிரச்னைக்காக புகார் அளிக்க கன்னியாகுமரியிலுள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். பணியில் இருந்த மூன்று போலீசார் விசாரணை என்ற பெயரில் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினர்,”என, கூறியிருந்தார்.அந்தப் பெண்ணிடம் பூட்டிய அறையில் வீடியோ மூலம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறை சேர்ந்த துாசிமாடன் வனப்பகுதியில் மரங்கள் வெட்டியதாக வனத்துறையினர் பொய் வழக்கு பதிவு செய்தனர் என ஆணைத்திடம் புகார் செய்தார். இதுகுறித்தும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதுபோல போலீஸ், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் நேற்றைய விசாரணையில் பங்கேற்றனர். அடுத்த விசாரணை அக்., 18ல் நடக்கும் என ஆணையம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி