போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : 5 பேர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்தனர். இதனால் ஆத்திரமுற்ற அந்த வாலிபர்கள் 5 பேர் அக்., 12 ல் இரண்டு டூவீலர்களில் சென்று தச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன், தென்கலம், கரை இருப்பு செக்போஸ்ட் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை. இதில் ஈடுபட்ட ராஜவல்லிபுரம் கிருஷ்ண பெருமாள் 19, அருண்குமாரை நேற்றும், அஜித்குமார் 30, பெருமாள் 27, சரண் 19, ஆகியோரை நேற்று முன்தினமும் போலீசார் கைது செய்தனர்.