உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தப்பிய போக்சோ கைதி விரட்டி பிடித்த போலீசார்

தப்பிய போக்சோ கைதி விரட்டி பிடித்த போலீசார்

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதானவர், மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடினார். போலீசார் அவரை துரத்தி பிடித்தனர். திருநெல்வேலி மாவட்டம், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்தவர் அமீர்கான், 21. இவர், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அம்பாசமுத்திரம் மகளிர் போலீசார், அமீர்கான் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை ஏமாற்றி, பஜாரில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அவர் தப்பி ஓடினார். போலீசார், விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி