உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், மத்திய அரசின் அணுமின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில், இரு அணு உலைகளில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து, தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. கூடங்குளம் முதலாவது அணு உலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக, இம்மாதம் 1ம் தேதி முதல் செப்., 25ம் தேதி வரை, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை