உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை

 ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி: லைசென்ஸ் காணாமல் போனது குறித்து வழக்கு பதிவு செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ.,க்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் டேவிட் . இவரது லைசென்ஸ் காணாமல் போனது. புதிய லைசென்ஸ் எடுப்பதற்காக போலீஸ் ஸ்டேஷனில் கண்டுபிடிக்க முடியவில்லை என சான்று கேட்டு மனு செய்தார். 2014 ஆகஸ்ட் 2ல் களக்காடு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,வெள்ளத்துரை சான்றளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். டேவிட், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்சப் பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக வெள்ளத்துரையை போலீசார் கைது செய்தனர். வழக்கு திருநெல்வேலி ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்தது. வெள்ளத்துரைக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுப்பையா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ