உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி

ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்கு வந்த சிவகாசி வாலிபர் விபத்தில் பலி

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நிகழ்ச்சிக்கு வந்த கார் விபத்துக்குள்ளானதில் சிவகாசி முத்துவீரன் 22, பலியானார். ஒண்டிவீரன் 254 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டி வடக்கூர் இருளாண்டி மகன் முத்துவீரன், உள்ளிட்டவர்கள் ஒரு காரில் திருநெல்வேலி நோக்கி வந்தனர். கங்கைகொண்டான் மேம்பாலம் அருகில் வந்த போது முன்னதாக நின்ற லாரியை ஒதுங்கி செல்லும்போது கார், விபத்துக்குள்ளானது. இதில் முத்துவீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இருவர் காயமுற்றனர். கங்கைகொண்டான் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ