உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பழமையான இரும்பு கசடு மாணவர்கள் கண்டுபிடிப்பு

பழமையான இரும்பு கசடு மாணவர்கள் கண்டுபிடிப்பு

திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், கல்லத்திகுளத்தில், 2,000 ஆண்டுகள் பழமையான இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான இரும்பு கசடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொல்லியல் துறை மாணவர்கள், தென்காசி மாவட்டம், கல்லத்தி குளத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில், இரும் பாலைகள் இருந்ததற்கான எச்சங்களாக பழங்கால இரும்பு கசடுகள் மற்றும் மண் குழாய்கள் பரவலாக கிடைத்தன. அவற்றை ஆய்வு குழுவினர் சேகரித்தனர். இந்த பகுதியில், பேராசிரியர் சுதாகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ