உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆபாச பேச்சு ஆசிரியர் சஸ்பெண்ட்

ஆபாச பேச்சு ஆசிரியர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே தருவை அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் குரு விநாயகம், 52. இவர், மாணவியரிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், ஆ பாசமாக பேசியதாகவும் புகார் எழுந்தது. மாவட்ட கலெக்டரிடம் மாணவியர் மனு அளித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் விசாரித்து, குரு விநாயகத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். கு ரு விநாயகம் கூறுகையில், ''தலைமை ஆசிரியை மாணவியரிடம் பணம் வசூலித்தது குறித்து நான் கேள்வி எழுப்பிய தால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப் பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை