உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நகையை விழுங்கிய திருடன்: எனிமா கொடுத்து மீட்பு

நகையை விழுங்கிய திருடன்: எனிமா கொடுத்து மீட்பு

திருநெல்வேலி: சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியிடம், 5 சவரன் நகையை திருடிய மருத்துவமனை ஊழியருக்கு, 'எனிமா' கொடுத்து நகை மீட்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள், 79. உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கொக்கிரகுளம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை, மருத்துவமனை ஊழியரான குறிச்சி பகுதியைச் சேர்ந்த ராமர், 25, என்பவர் பறித்துள்ளார். சுப்பம்மாள் சத்தம் போட்டதால், ராமர் கழிப்பறைக்குள் புகுந்தார். மருத்துவமனை ஊழியர்கள் அவரை பிடித்தனர். அவரிடம் நகை இல்லை. இருப்பினும் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்ததில், நகையை விழுங்கி விட்டதாக தெரிவித்தார். போலீசார் ராமருக்கு எனிமா கொடுத்து, அவர் விழுங்கிய நகையை வெளியே எடுத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

VSMani
ஆக 26, 2025 11:31

இந்த vj ஆஸ்பத்திரி திருட்டு ஆஸ்பத்திரி. ஒரு வசதி கிடையாது. டாக்டர் வினோத் குமார் மகா பெரிய திருடர் என்று எனது நண்பன் கூறினார். எனது நண்பன் தனது அம்மாவையும் தம்பியையும் அங்கு சேரும்படி வினோத் குமாரின் ஏஜென்ட் ஒருவர் சொன்னதன் பேரில் அந்த ஆஸ்பத்திரி சேர்த்து, தினமும் ஆண்டிபயாடிக் மருந்துகள் 30 ஆயிரம் 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கவைத்து வாரக்கணக்கில் ஆஸ்பத்திரியில் தங்க வைத்து லட்சக்கணக்கில் பணத்தை கொள்ளை அடித்து இறுதியில் இரண்டு உயிர்களையும் கொன்றுவிட்டாராம். மக்களே உஷார்


சமீபத்திய செய்தி