உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட அதிமுக.,பிரமுகர் மனு

செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட அதிமுக.,பிரமுகர் மனு

செங்கோட்டை : செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கு அதிமுக பேரவை செயலாளர் வக்கீல் வெங்கடேசன் சுயேட்சையாக போட்டியிட நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளதால் அதிமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது. செங்கோட்டை நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட பாரத் மாண்டிச்சோரி பள்ளி தாளாளர் வக்கீல் மோகனகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனிடையில் அதிமுக பேரவையின் நகர செயலாளராக பணியாற்றி வரும் வக்கீல் வெங்கடேசன் நேற்று திடீரென நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட தேர்தல் அதிகாரி சீதாமோகனிடம் மனுத்தாக்கல் செய்தார்.

வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெறக்கூடிய ஒருசில மணி நேரங்களுக்கு முன் வக்கீல் வெங்கடேசன் மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''ஏற்கனவே செங்கோட்டை நகராட்சியில் கவுன்சிலராக பணியாற்றி வருகிறேன். குறிப்பிட்ட வார்டுகளுக்கு மட்டுமே சேவை செய்த எனக்கு நகராட்சி முழுவதும் உள்ள மக்களுக்கு முழுமையான அளவில் சேவை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் மனுத்தாக்கல் வழங்கியுள்ளேன்'' என்றார். அதிமுக பேரவை செயலாளராக இருந்து வரும் வக்கீல் வெங்கடேசன் வேட்புமனுத்தாக்கல் அதிமுக வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி