உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கள்ளக்காதல் ஜோடி தற்கொலை கடையம் அருகே பரபரப்பு

கள்ளக்காதல் ஜோடி தற்கொலை கடையம் அருகே பரபரப்பு

ஆழ்வார்குறிச்சி : கடையம் அருகே கள்ளக்காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆழ்வார்குறிச்சிக்கு அருகே உள்ள கல்யாணிபுரத்தில் டீக்கடை வைத்திருப்பவர் மாரியப்பன். இவரது மனைவி ஆதிலட்சுமி(35). இவருக்கு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கல்யாணிபுரத்திற்கு அருகே உள்ள சிவசைலத்தை சேர்ந்த திருமலைக்கோனார் மகன் கடற்கரை(45). இவருக்கு திருமணமாகி பிச்சம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாரியப்பனின் டீக்கடைக்கு பால் ஊற்ற கடற்கரை வரும்போது ஆதிலட்சுமிக்கும், கடற்கரைக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இதை மாரியப்பன் கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிலட்சுமி கணவனிடம் சண்டை போட்டுவிட்டு கடையம் சொரிமுத்துபிள்ளை தெருவில் தனது தந்தை ராமையா வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 27ம் தேதி கோயிலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் என கூறி சென்ற ஆதிலட்சுமியை காணவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை ஆதிலட்சுமியும், கடற்கரையும் கடையம் வாசுகிரி மலை அருகே விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆஸ்பத்திரியில் ஆதிலட்சுமியும், கடற்கரையும் பரிதாபமாக இறந்து போனார்கள். புகாரின் பேரில் கடையம் சப்-இன்ஸ்பெக்டர் காஜாமைதீன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி