உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் அளிக்க வலியுறுத்தல்

பணகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் வசதிகள் அளிக்க வலியுறுத்தல்

திருநெல்வேலி : பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் வசதிகள் அளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராதாபுரம் தொகுதியில் அதிக மக்கள் தொகை கொண்டது பணகுடி டவுன் பஞ்., பகுதி. இங்கு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. '24 மணி நேர சேவை' என்ற நிலையில் 5 டாக்டர்கள் பணி உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் 2 டாக்டர்களே இங்கு பணியில் உள்ளனர். 2 டாக்டர்கள் தற்காலிக பணியில் உள்ளனர். ஒருவர் நியமனம் செய்யப்படவில்லை. இங்கு நிரந்தரப்பணியிடத்தில் 5 டாக்டர்கள் பணியமர்த்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புறநோயாளிகளுக்கு தனிப்பிரிவு துவக்க வேண்டும். சித்த மருத்துவப்பிரிவு துவக்கி சித்த மருத்துவர் நியமிக்க வேண்டும். மருத்துவ செவிலியர்களை நியமிக்க வேண்டும். இரவு பிரவச வார்டில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பாக காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். உள், புற நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வசதியாக அலுவலர்களுக்கு உறைவிட இல்லங்கள் கட்ட வேண்டும். 108 அரசு ஆம்புலன்ஸ் வசதி அளிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர்.இதுதொடர்பாக பணகுடி காந்தி பேரவை தலைவர் விக்னேஸ்வரன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ