உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசி பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்

தென்காசி பள்ளியில் ரம்ஜான் கொண்டாட்டம்

தென்காசி : தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது. தென்காசி காட்டுபாவா உயர்நிலைப் பள்ளியில் நடந்த ரம்ஜான் விழாவிற்கு பள்ளி நிர்வாகி முகம்மது இப்ராகிம் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் முகம்மது உசேன் வரவேற்றார். முஸ்லிம் மதத்தை சேர்ந்த 44 மாணவ, மாணவிகள் பிற மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளை அழைத்து விருந்து கொடுத்து உபசரித்தனர். மேலும் பிற மத மாணவ, மாணவிகளுக்கு உடைகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி