மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
ஆழ்வார்குறிச்சி : கடையம் பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தில் வரும் 9ம் தேதி தவச உற்சவ பண்டிகை, ஸ்தோத்திர பண்டிகை துவங்குகிறது. கடையம் பரிசுத்த இம்மானுவேல் ஆலயத்தில் 67வது தவச உற்சவ பண்டிகையும், 6வது ஸ்தோத்திர பண்டிகையும் வரும் 9ம் தேதி துவங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடக்கிறது. அன்று மாலை நற்செய்தி பவனியுடன் விழா துவங்குகிறது. இரவு 7 மணிக்கு ஆயத்த ஆராதனையும், நாகர்கோவில் டேவிட் குவார்த் நற்செய்தி கூட்டமும் நடக்கிறது. இரண்டாம் நாள் காலை 5 மணியளவில் ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. துவக்கப்பள்ளி ஜேம்ஸ் கிறிஸ்டோபர் அருணோதய பிரார்த்தனையும், 9.30 மணிக்கு சீவலசமுத்திரம் சேகர தலைவர் டேனியல் சாலமோன் திருமுழுக்கு ஆராதனை செய்தியும் அளிக்கிறார். மதியம் 1.30 மணிக்கு திருமண்டல பேராயர் கிறிஸ்துதாஸ் பண்டிகை ஆராதனை சிறப்பு செய்தி அளிக்கிறார். மாலை 4 மணிக்கு எஸ்தர் விமலா டேனியல் சாலமோன் சிறப்பு செய்தியும், 7.30 மணியளவில் பஜனை பிரசங்கமும் நடக்கிறது.
3ம் நாள் நிகழ்ச்சியில் கோடன்குளம் ஜெசுகுட்டி டாலெத் அருணோதய பிரார்த்தனையுடன் விழா துவங்குகிறது. ஜெப ஒருங்கிணைப்பு இயக்குனர் இம்மானுவேல் ஞானராஜ் சிறப்பு செய்தியும், மதியம் 12 மணிக்கு வேதபாட தேர்வும், 2 மணியளவில் வருடாந்திர கூட்டமும், பாவூர்சத்திரம் சேகர தலைவர் ஸ்டீபன் ஆபிரகாம் பாக்கியநாதன் செய்தியும் அளிக்கிறார். மாலை 4 மணியளவில் வாலிபர் சிறப்பு கூடுகையும், 6.30 மணிக்கு கீத ஆராதனையும், இரவு 7.30 மணிக்கு சிறப்பு நற்செய்தி கூட்டமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பரிசுத்த இம்மானுவேல் ஆலய சேகர தலைவர் டேவிட் அன்புபிரபாகரன், செயலாளர் ஆசீர்வாதம் வெள்ளத்துரை, பொருளாளர் தங்கராஜ் பாஸ்கர் மற்றும் சேகர நிர்வாகிகள், சபை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025