மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : பாளை.,யில் ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நெல்லை மாவட்ட ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் அரசு தேர்வில் அதிக மார்க் எடுக்கும் ஆதிதிராவிட மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 15 ஆண்டாக இந்த ஆண்டு பரிசளிப்பு விழா பாளை.யில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சாது சங்கர்சிங் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் தலைமை மேலாளர் மதிச்செல்வன், தூத்துக்குடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் அண்ணாத்துரை கலந்துகொண்டனர். விழாவில் எஸ்எஸ்எல்சி.,பிளஸ் 2 தேர்வில் அதிக மார்க் எடுத்த ஆதிதிராவிட மாணவ,மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்பட்டன. விழாவில், பொதுசெயலாளர் அண்ணாத்துரை, வக்கீல் ஜெயப்பிரகாஷ், பொருளாளர் குமாரசாமி,மாவட்ட நிர்வாகிகள் சவுந்திரபாண்டியன், சாமி, கணேசன், சுந்தரமூர்த்தி, ஜெகநாதன், மதியழகன், கணபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
29-Sep-2025
25-Sep-2025