உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆயிரப்பேரி பகுதியில்விவசாய பணிகள் தீவிரம்

ஆயிரப்பேரி பகுதியில்விவசாய பணிகள் தீவிரம்

தென்காசி:ஆயிரப்பேரி பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.குற்றால சீசனை முன்னிட்டு பெய்யும் சாரல் மழையை நம்பி தென்காசி, செங்கோட்டை பகுதி விவசாயிகள் கார் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் சீசன் துவங்கினாலும் உரிய நேரத்தில் போதிய மழை பெய்யாததால் பல குளங்கள் நிரம்பாமல் இருக்கின்றன. இருப்பினும் சில குளங்கள் நிரம்பியுள்ளது. மேலும் சில குளங்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சாரல் மழையை நம்பி ஆயிரப்பேரி பகுதி விவசாயிகள் கார் நெல் சாகுபடிக்கான விவசாய பணிகளை துவக்கியுள்ளனர்.வயல்களில் டிராக்டர் மூலம் தொழி உழவு செய்து நிலத்தை பன்படுத்தும் பணி நடந்து வருகிறது. விவசாய வேலைக்கு போதிய ஆட்கள் கிடைக்காமல் இருக்கிறது. இதனால் விவசாயிகள் டிராக்டர் மூலம் உழவு பணி மற்றும் களையெடுக்கும் இயந்திரம் மூலம் களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கார் நெல் சாகுபடிக்கு தட்டுப்பாடின்றி உரிய நேரத்தில் உரம் கிடைக்க வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி அருகே ஆயிரப்பேரி பகுதியில் உள்ள நன்செய் நிலங்களில் கார் நெல் சாகுபடி பணி துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை