உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை

வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை

திருநெல்வேலி:வாகைகுளத்தில் சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.நான்குநேரி தாலுகா ராஜாக்கள்மங்களம் பஞ்.,சிற்குட்பட்ட வாகைகுளத்தில் தினமும் இரவு 6 மணி முதல் 9.30 மணி வரை லோ வோல்டேஜ் காரணமாக வீட்டில் உள்ள டியூப் லைட், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மோட்டார் இயங்காத நிலை உள்ளது. இதனால் இந்நேரங்களில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதுடன், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு கூடுதல் மின்மாற்றி அமைத்தும், மின் வயர்களை மாற்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை