உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தென்காசியில் கண் மருத்துவபரிசோதனை பயிற்சி முகாம்

தென்காசியில் கண் மருத்துவபரிசோதனை பயிற்சி முகாம்

தென்காசி:தென்காசியில் கண் மருத்துவ பரிசோதனை பயிற்சி முகாம் நடந்தது.நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில் குழந்தைகள் கண் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை பயிற்சி முகாம் தென்காசி ரோட்டரி அருணாசலம் ஹாலில் நடந்தது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கண்களில் குறைபாடு ஏற்பட்டால் அவற்றை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் பயிற்சி அளித்தனர்.பயிற்சியை தென்காசி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கிரேஸ் ஜெயமேரி துவக்கி வைத்தார். பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் திரளானோர் பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்க தலைவர் மாரிமுத்து, செயலாளர் சாமி, இயக்குநர்கள் எட்வர்ட் தேவநாதன், ஆவுடையப்பன், ஜெயச்சந்திரன், ரமேஷ், முருகன்ராஜ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை