மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருவேங்கடம்:வட்டார அளவிலான தடகள போட்டிகளில் சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கிடையே சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகள போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 16 பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் சுப்புலாபுரம் செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி மாணவர் மகேஸ்வரன் 100மீ, 600மீ ஓட்டத்தில் இரண்டாமிடமும், குண்டு எறியும் போட்டியில் முதலிடமும் பெற்றுள்ளார்.17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முத்துகிருஷ்ணன் 100மீ, 800மீ ஓட்டம், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மேலும் குழு விளையாட்டு கோகோ போட்டியில் 14, 17 வயதிற்குட்பட்டோர் ஆகிய இருபிரிவுகளிலும் இப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரையும் தலைமை ஆசிரியர் பெருமாள்சாமி, ஆசிரிய, ஆசிரியைகள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பாராட்டினர்.
29-Sep-2025
25-Sep-2025