உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மானிய விலையில் விதைகள் விற்பனை

மானிய விலையில் விதைகள் விற்பனை

திருநெல்வேலி:சேரன்மகாதேவி, வீரவநல்லூர் வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன.சேரன்மகாதேவி, வீரவநல்லூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 2011-12ம் ஆண்டு விதை கிராம திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் வம்பன்3 உளுந்து சான்று விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரிசல்பட்டி, சொக்கலிங்கபுரம், தெற்கு வீரவநல்லூர்1 மற்றும் தெற்கு வீரவநல்லூர்2 வருவாய் திட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் வரும் பருவமழையை கருத்தில் கொண்டு இவ்விதைகளை வாங்கி பயனடையுமாறு சேரன்மகாதேவி வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி