உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பணகுடி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவன் கைது

பணகுடி அருகே மனைவியை எரித்து கொன்ற கணவன் கைது

பணகுடி:பணகுடி அருகே மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்து கொலை செய்த கணவனை பணகுடி போலீசார் கைது செய்தனர்.பணகுடி போலீஸ் சரகம் காவல்கிணற்றை சேர்ந்தவர் இருதயகிங்ஸ்டன் (32). இவர் மீது பணகுடி போலீசில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சேவியர் கொலை வழக்கில் இவர் முக்கிய குற்றவாளியாக புகார் செய்யப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் இவர் மீது பணகுடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்த இருதயகிங்ஸ்டன் மனைவியுடன் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிங்ஸ்டனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கிங்ஸ்டன் மனைவி லீமாரோஸ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். இதில் படுகாயமடைந்த லீமாரோஸ் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசில் லீமாரோஸின் தாயார் பத்மா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குபதிவு செய்து இருதயகிங்ஸ்டனை கைது செய்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி