உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

அதிமுக வேட்பாளர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

திருநெல்வேலி : நெல்லையில் அதிமுக வேட்பாளர் உட்பட 8 பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நெல்லை மாநகராட்சி 6வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர் சுதா. பரமசிவன். இவர் நெல்லை மாவட்ட ஜெ., பேரவை தலைவராக உள்ளார். நேற்றுமுன்தினம் சுதா. பரமசிவன் தன் ஆதரவாளர்களுடன் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல வேண்டும். சுதா. பரமசிவன் வேட்புமனு தாக்கல் செய்த போது 7 பேர் உடன் இருந்தனர். இதுகுறித்து நெல்லை ஜங்ஷன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சுதா. பரமசிவன் உட்பட 8 பேர் மீது தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி