மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி,: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்த 30வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர். என்.ரவி , 459 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.திருநெல்வேலி அபிஷேகபட்டி பல்கலை வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் சந்திரசேகர் வரவேற்றார். தங்கப்பதக்கம் பெற்ற 108 பேர், பி.எச்டி முடித்த 351 என மொத்தம் 459 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார். ராஜஸ்தான் தொழிநுட்ப பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நளினாஷ் வியாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''முற்போக்கான மனநிலையே முன்னேற்றத்தை தூண்டும் நேர்மறையான சக்தியாகும். மாணவர் சமூகம் மற்றும் பல்கலைக்கழகம் திறன் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். தமிழக உயர்நிலைத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்கவில்லை. திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணிபுரிந்தவர் முருகன் 74. பணியும்போது பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். அவர் ஓய்வுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை முடித்து தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றார்.
29-Sep-2025
25-Sep-2025