விபத்தில் இருவர் பலி மக்கள் மறியல்
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே கலந்தபனையூரைச் சேர்ந்தவர் ராகவன், 21. இவரும் அதேபகுதியைச் சேர்ந்த கண்ணன், 27, என்பவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு, பணகுடியில் இருந்து வடலிவிளை நோக்கி டூ - வீலரில் சென்றனர். எதிரே ஒருவழி பாதையில், வடலிவிளை சுந்தரபாண்டியன், 35, என்பவர், டூ - வீலரில் வந்தார். இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ராகவன், சுந்தரபாண்டியன் உயரிழந்தனர். கண்ணன் காயமடைந்தார். அடிக்கடி விபத்துகள் நடப்பதால், அங்கு பாலம் அமைக்கக்கோரி, நேற்று மாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.