உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தங்கை கணவர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

தங்கை கணவர் வெட்டிக்கொலை இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி:தங்கை கணவரை வெட்டிக் கொலை செய்த அண்ணன் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் இட்டமொழியை சேர்ந்தவர் துரைசிங்கம் 27. இவரது மனைவி தங்க சொர்ணம். இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனையில் தங்க சொர்ணம் பிரிந்து தூத்துக்குடி மாவட்டம் மணப்பாட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். துரைசிங்கம் மீது அவரது மைத்துனர் முத்துக்குமரன் 41, ஆத்திரமுற்றார். 2015 நவம்பர் 2ம் தேதி இட்டமொழியில் துரைசிங்கத்தின் வீட்டுக்குள் நுழைந்து முத்துக்குமரன் மற்றும் உறவினர் முத்துக்குமார் 50, ஆகியோர் சேர்ந்து துரைசிங்கத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கதிரவன் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி