உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இருவரிடம் 160 பவுன், ரூ.37 லட்சம் மோசடி வழக்கு இரு பெண்கள் கைது: பாதிரியாருக்கு வலை

இருவரிடம் 160 பவுன், ரூ.37 லட்சம் மோசடி வழக்கு இரு பெண்கள் கைது: பாதிரியாருக்கு வலை

திருநெல்வேலி: ஓய்வு பெற்ற ஆசிரியை யிடம் 160 பவுன் நகைகள், ரூ.1.5 லட்சத்தை பெற்று இரிடியத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறி மோசடி செய்த பெண் சி.பி.சி.ஐ.டி., போலீ சாரால் கைது செய்யப் பட்டார். இதுபோல மற்றொரு பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்குகள்ளிகுளம் அமிர்த ஹெலன் ராஜாத்தி 63, ஓய்வுபெற்ற ஆசிரியை. இவருக்கு 1990ல் ஆசிரியர் வேலை கிடைக்க உதவிய கள்ளிகுளம் கத்தோலிக்க பாதிரியார் தேவ ராஜன், அவரது உதவி யாளர் பவுலின் ராணி ஆகியோர், தாங்கள் நடத்தும் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திற்கு நிதி கேட்டனர். 2024 நவம்பரில் ரூ.1.5 லட்சம் காசோலையாக பெற்றனர். மேலும் அமிர்த ஹெலன் ராஜாத்தி, அவரது மகளின் 160 பவுன் நகைகளை வாங்கினர். ஆனால் பணத்தையோ நகைகளையோ திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது நகைகளை அடகு வைத்து கிடைத்த பணத்தை இரிடியம் தொழிலில் முதலீடு செய்துள்ளதாகவும், அதன் மூலம் ரூ.கோடிக் கணக்கில் வருமானம் கிடைக்கும் எனவும் கூறினர். ரிசர்வ் வங்கி உட்பட பல்வேறு வகைகளில் தமக்கு பணம் வருவதாக போலி ஆவணங்களை காட்டியும் ஏமாற்றினர். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமிர்த ஹெலன் ராஜாத்தி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் செய்தார். பாதிரியாரின் உதவியாளர் பவுலின் ராணியை 54, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிரியார் தேவராஜன், மதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்த பெருமாள் செட்டியார், பாலசுப்பிர மணியன் ஆகியோரை தேடி வருகின்றனர். இதில் பெருமாள் செட்டியார், பாலசுப்பிரமணியன் புதுச்சேரியில் ஜனனி பாரத் டிரஸ்ட்டை நடத்தி வருகின்றனர். ரூ. 36 லட்சம் மோசடிபெண் கைது தென்காசி குத்துக்கல் வலசை பாரதிநகர் ஹரிஹர சுப்பிரமணியன் மனைவி விஜயலட்சுமி 50. இவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்த சுப்புராஜ் மனைவி ஜெயகுரு இரிடியம் திட்டத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.ஒரு கோடி கிடைக்கும் எனக்கூறினார். மேலும் சிறிது சிறிதாக ரூ. 36 லட்சம் வரை விஜய லட்சுமியிடம் பெற்றார். ஜெயகுருவுடன் கோவை ஆனைமலையை சேர்ந்த சிவராமன், திருப்பூர் ராணி, குடுமியான்மலை ரவிச்சந்திரன், காட்பாடி ஜெயராஜ், சுவாமி நாதன் ஆகியோர் ஈடு பட்டது தெரிய வந்தது. இவர்கள் திருப்பூர் பெருமாநல்லூரில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து திருப்பூர் ராணியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ