ரூ.10 லட்சம் மோசடி வழக்கு டில்லியில் பெண் கைது
திருநெல்வேலி:வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 10 லட்சம் வாங்கி மோசடி செய்த பெண் டில்லியில் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் மாயாண்டி 60. இவரது மகன் சந்திரமகேஷ் 26, என்பவருக்கு வேலை தேடி வந்தார். 2022ல் இவரை அணுகிய கேரள மாநிலம் சித்தராவை சேர்ந்த ரெஜின் 55 மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த உமா 40, ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சத்து 87 ஆயிரம் பெற்றனர். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. எனவே மாயாண்டி திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவில் 2023ல் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கடந்தாண்டு ரெஜின் கைது செய்யப்பட்டார். டில்லியில் தலைமறைவாக இருந்த உமாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.