உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடுகின்றனர். திருநெல்வேலி மானுாரை சேர்ந்தவர் முத்துலட்சுமி 40. இவர் நேற்று முன்தினம் மாலை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூவர் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து அவரை சூழ்ந்தனர். தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து டூவீலரில் தப்பினர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
நவ 10, 2025 11:54

அவனவன் உசிருக்கு பயந்து கொண்டிருக்கான். திராவிட மாடல் அப்பாவின் ஆட்சியில் அவரதுதுறையினரின் குடியிருப்பில் கொலை நடக்கும் சமயத்தில், ஆற்றங்கரையில் நடக்கும் அசம்பாவிதங்கள் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்.