மேலும் செய்திகள்
ஒரே நாளில் மாமியார், மருமகன் உயிரிழப்பு
01-Jan-2025
திருநெல்வேலி : நெல்லை அருகே ஒரே சாலை விபத்தில் கணவர், இரண்டு மகள்கள், தாயை இழந்த பெண் இறந்தார்.நெல்லை அருகே ராஜபதியைச் சேர்ந்தவர் செல்வி, 40. இவர் தன் தந்தை கந்தனுடன் பைக்கில் அதே பகுதி ரேஷன் கடைக்கு சென்றார். அப்போது அவருக்கு தலைசுற்றி மயக்கம் ஏற்பட்டது. கீழே விழுந்த செல்வி, நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தினர். உயர் ரத்த அழுத்தம் காரணமாக செல்வி இறந்தது விசாரணையில் தெரிந்தது. செல்வியின் கணவர் கண்ணன், அவரது மகள்கள் மாரீஸ்வரி, சமீரா, தாய் ஆண்டாள் ஆகியோர், கடந்த செப்டம்பர் 17ல், பைக்கில் நெல்லை வடக்கு பைபாஸ் சாலையில் சென்ற போது டேங்கர் லாரி மோதி, அதே இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
01-Jan-2025