உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது

ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த வாலிபர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் ஏ.டி.எம்., இயந்திரத்தை கல்லால் அடித்து சேதப்படுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வள்ளியூரில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருந்தை அறிந்த வங்கி மேலாளர், போலீசில் புகாரளித்தார். சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தபோது, துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கீழக்கருங்கடல் காலனியை சேர்ந்த இசக்கிமுத்து மகன் செல்வம் 30, இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை