வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தமிழகத்தில் வேதனையான நிகழ்வுகள் இன்னமும் தீரவே இல்லை , இந்த கொலைகளுக்கு விடியவே கிடையாதா ?
திருநெல்வேலி; திருநெல்வேலியில் பட்டியலின ஐ.டி.,ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசில் எஸ்.ஐ.,யாக பணியாற்றும் அவரது தந்தை, தாய் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி 49, ஓட்டப்பிடாரம் அருகே அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் கவின் செல்வகணேஷ் 27. பி.இ. படித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் துாத்துக்குடியில் படித்தபோது கூட படித்த மாணவியுடன் நட்பாக பழகினார். அந்த பெண் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராக உள்ளார். பெண்ணின் தந்தை சரவணன் ராஜபாளையம் ஆயுதப்படையில் எஸ்.ஐ., யாகவும் தாயார் கிருஷ்ண குமாரி மணிமுத்தாறு ஆயுதப்படையில் எஸ்.ஐ.,யாகவும் பணிபுரிகின்றனர். இவர்களது மகன் சுர்ஜித் 24, உள்ளார். கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். பெண் குடும்பத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். ஜாதி வேறுபாடு காரணமாக சுர்ஜித், தமது அக்காளுடன் கவின் பழகுவதை கண்டித்தார். நேற்று முன்தினமும் கவின் தனது தாத்தாவை சிகிச்சைக்கு அழைத்து வந்திருப்பதை கேள்விப்பட்ட சுர்ஜித், தமது டூவீலரில் கவினை அழைத்துச் சென்று கே.டி.சி. நகர் முதலாவது தெருவில் வெட்டி கொலை செய்தார். சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து கவின் தாயார் தமிழ்ச்செல்வி போலீசில் புகார் தெரிவித்திருந்தார். அதில் இந்த கொலையில் சுர்ஜித்தின் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். பெற்றோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவத்தை தொடர்ந்து அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் கவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளியின் பெற்றோரை கைது செய்ய வேண்டும், அதுவரை கவின் உடலை வாங்க மாட்டோம் என தெரி வித்தனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை முடிந்தும் குடும்பத்தினர் வராததால் கவின் உடல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேதனையான நிகழ்வுகள் இன்னமும் தீரவே இல்லை , இந்த கொலைகளுக்கு விடியவே கிடையாதா ?