உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வங்கிக்குள் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

வங்கிக்குள் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

திருநெல்வேலி:திருநெல்வேலி தனியார் வங்கிக்குள் வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 26. திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள தனியார் வங்கியில் மூன்று வாகனங்களுக்கு கடன் பெற்றிருந்தார். இதில் ஒரு பிக்கப் வாகனக் கடனை முழுமையாக கட்டியிருந்தும், மற்ற இரண்டு வாகனங்களுக்கான தவணைகள் பாக்கி யிருந்ததாக கூறப் படுகிறது. இந்நிலையில் பிக்கப் வாகனத்திற்கு தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெற வங்கிக்கு வந்த முத்துக்குமாருக்கு, பாக்கி இருப்பதால் சான்று வழங்க தாமதமானது. இதனால் விரக்தியடைந்த அவர், மதுபோதையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவரை தடுத்தனர். போலீசார் முத்துக்குமாரை மீட்டு விசாரணை நடத்தினர். கடன் கட்டிய வாகனத்திற்கு என்.ஓ.சி., கிடைக்காததால் விரக்தியடைந்து அவர் இந்த முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ