உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிணற்றில் சிக்கி இளைஞர் பலி

கிணற்றில் சிக்கி இளைஞர் பலி

திருவள்ளூர் : பாதிரிவேடு அருகே கிணற்று சேற்றில் சிக்கி இளைஞர் இறந்தார். சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் தீபக், 18. இவர் சமையல் சர்வீஸ் வேலை செய்வதற்காக 9ம் தேதி பாதிரிவேடு அடுத்த குமாரநாயக்கன்பேட்டை வெக்காளியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு வேலை முடிந்து, நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக கோவில் அருகே உள்ள கிணற்றில் இறங்கினார். நீச்சல் தெரியாத இவர், கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்போது, சேற்றில் சிக்கி இறந்தார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை