| ADDED : ஜூலை 15, 2024 11:20 PM
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து, மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் செல்ல, கடந்த 10ம் தேதி பயணியர் விமானம் தயாராக இருந்தது.அதில் செல்லவிருந்த பயணியரின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, பயணி ஒருவரின் உடைமைகளில், இரண்டு பெட்டிகளில் உயிருடன் கூடிய 138 நட்சத்திர ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மலேஷியா, சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட நாடுகளில், ேஹாட்டல்களில் இறைச்சிக்காக ஆமைகள் பயன்படுவதால், சட்ட விரோதமாக அவை கடத்தப்படுகின்றன. இந்த நிலையில், மலேஷியாவிற்கு கடத்த முயன்ற 138ஆமைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து, வன விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் ஆமைகளை ஒப்படைத்தனர். ஆமைகளை கடத்த முயன்றவரை, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.