உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 14ல் டி.என்.பி.எஸ்சி., குரூப்-2 தேர்வு திருவள்ளூரில் ஆலோசனை

14ல் டி.என்.பி.எஸ்சி., குரூப்-2 தேர்வு திருவள்ளூரில் ஆலோசனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப்-2 தேர்வில், 21,440 பேர் பங்கேற்கின்றனர்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு -II பதவிகளுக்கான எழுத்து தேர்வு, வரும் 14ல் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், 71 மையங்களில் 21,440 பேர் தேர்வு எழுத உள்ளனர். 5 நிலைய கண்காணிப்பு குழு மற்றும் 5 பறக்கும் படை குழுவினர்கள் துணை கலெக்டர் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 20 நடமாடும் குழு, 76 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு மையம் கண்காணிக்கப்படும். தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம், குடிநீர், பேருந்து, கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், உதவி கலெக்டர்- பயிற்சி ஆயுஷ் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை