உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 32 ஏட்டுகள் சிறப்பு எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு

32 ஏட்டுகள் சிறப்பு எஸ்.ஐ., ஆக பதவி உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 32 ஏட்டுகள், சிறப்பு சப்---இன்பெஸ்க்டராக பதவி உயர்வி பெற்றுள்ளனர்.தமிழக காவல் துறையில் கடந்த 1999-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணிபுரிந்த போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்-- -இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.அதன்படி, திருவள்ளூர் காவல் மாவட்டத்தில் சட்டம்- -ஒழுங்கு, மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 32 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு சப்- -இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. திருத்தணி உட்கோட்டத்தில், சக்ரவர்த்தி, குமார், ருக்மங்காதன், ஜானகிராமன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஐவருக்கு தலைமை காவலர் பதவியில் இருந்து சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றவர்களை திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ