உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 4 நாட்கள் பிரச்னைக்கு தீர்வு கடமஞ்சேரியில் சீரான குடிநீர்

4 நாட்கள் பிரச்னைக்கு தீர்வு கடமஞ்சேரியில் சீரான குடிநீர்

பொன்னேரி, : மீஞ்சூர் ஒன்றியம், வேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கடமஞ்சேரி கிராமத்திற்கு, கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக கிராமத்திற்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், கிராமவாசிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது.இதுகுறித்து, நேற்று நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர்.காணியம்பாக்கம் அருகே கடமஞ்சேரி கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தை சரிசெய்தனர். அதை தொடர்ந்து, கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் சீரானது.இந்நிலையில், குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி