உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது

வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது

பொன்னேரி:பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி ஜோதி, 40. இவரது மகன் தமிழரசன், 22, கடந்த ஜூலை மாதம், நடந்த அடிதடி தகராறு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில், கடந்த, 8 ம் தேதி இரவு, ஐந்துபேர் கொண்ட கும்பல் கத்திகளுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து, அவரது தாயார் ஜோதியிடம் தமிழரசன் எங்கே எனக்கேட்டு மிரட்டியது.பின், அங்கிருந்த பைக்கை அடித்து உடைத்தும், கத்தியால் வெட்டியும் சேதப்படுத்திவிட்டு தப்பியது. இது குறித்து ஜோதி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இரண்டு மாதங்களுக்கு முன், பொன்னேரி அடுத்த மாலிவாக்கம் கிராமத்தை சேர்ந்த கவுதம், 24, என்பவருக்கும், தமிழரசனுக்கும் திருமண விழா ஒன்றில் தகராறு ஏற்பட்டது தெரிந்தது.முன்விரோதம் காரணமாக, கவுதம் மற்றும் அவரது கூட்டாளிகள், கடந்த, 8 ம் தேதி தமிழரசன் வீட்டினுள் புகுந்து ரகளையில் ஈடுபட்டதும் தெரிந்தது.அதையடுத்து போலீசார் கவுதம், 24, அவரது கூட்டாளிகள் மாலிவாக்கம் துரைமுருகன், 21, திருவேங்கிடபுரம் ஜெகதீஸ்வரன், 23, ஆமூரை சேர்ந்த கணபதி, 23, மற்றும் விஜய் சிம்மா, 18, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, கத்தி, இரும்பு ராடு, கே.டி.எம்., பைக் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை