உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பாளையக்கார தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி, 59. அங்குள்ள இரும்பு கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருந்தபோது, இரண்டு நபர்கள் கத்தியை காட்டி கல்லாவில் இருந்த, 600 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.இதுகுறித்து ராமமூர்த்தி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, பணம் பறித்துச் சென்ற பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த புகழ், 22, சஞ்சய், 23 ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி